நடிகை கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் நடிகர் திலீப்பின் ஜாமின் மனுவை கேரள ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு உள்ளதாக கூறி கேரள போலீஸ், அவரை கைது செய்து, ஆலுவா சிறையில் அடைத்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தான் குற்றமற்றவர், வேண்டுமென்றே இந்த வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் திலீப் கூறியிருந்தார். இந்த வழக்கு அங்கமாலி கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் ஜாமின் கேட்டு திலீப் ஏற்கனவே மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை அங்கமாலி கோர்ட் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து கேரள ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார் திலீப். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், திலீப்பின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment