அஜய் தேவ்கனை அதிரவைத்த இலியானா..!
தெலுங்கில் பீக்கில் இருந்த நேரத்தில் இந்தியில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து அங்கே சென்றார் இலியானா.. நடித்த அந்தப்படமும் சரியாக ஓடாமல் போய், பாலிவுட்டுக்கு சென்றதால் காட்டிய பந்தா காரணமாக இங்கே தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை கோட்டைவிட்டார் இலியானா. தற்போது இலியானாவுக்கு ஆறுதலாக இருப்பது பாலிவுட்டில் அஜய் தேவ்கனுடன் ஜோடியாக நடித்துள்ள 'பாத்சாகோ' என்கிற படம் தான்.
சமீபத்தில் இந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி ஒன்றின் வீடியோ வெளியிடப்பட்ட்டது.. சாதாரணமாக போய்க்கொண்டிருக்கும் அந்த வீடியோவின் இறுதிக்காட்சியில் அஜய் தேவ்கனுடன் நெருக்கமாக நிற்கும் இலியானா, ஒரு ஓவர் கோட் அணிந்து நிற்பது போலவும் திடீரென அந்த கோட்டை அப்படியே கழட்டி நழுவ விட்டு தந்து உடலை அஜய் தேவகனின் கண்களுக்கு விருந்தாக்குவது போலவும் இடம்பெற்ற காட்சி ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது..
இந்த காட்சியில் நடித்தது பற்றியும் இலியானாவே கூறியுள்ளார்.. தனது காதலன் மேல் தான் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளேன் என ஒரு காதலி அவனுக்கு உணர்த்த வேண்டிய காட்சி அது.. அந்த காட்சி இயக்குனரின் திட்டப்படி வேறு மாதிரி எடுப்பதாகத்தான் இருந்தது.. ஆனால் அந்த காட்சி படமாகும் நேரத்தில் கோட்டை நழுவவிடும் யோசனை எனக்கு திடீரென வந்தது அதனை உடனடியாக செய்தும் விட்டேன்.. இதைவிட ஒரு பெண் தனது காதலனிடம் கொண்டுள்ள நம்பிக்கையை எப்படி வெளிப்படுத்தி விட முடியும்” என கூறியுள்ளார் இலியானா.

Post a Comment