ராஜமவுலி நாகசைதன்யா பட விழாவில்
தெலுங்கில் நாகசைதன்யா நடித்துள்ள படம் யுத்தம் சரணம். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். மண்வாசனை ரேவதி நாக சைதன்யாவின் அம்மாவாக நடித்திருக்கிறார். முதன்முறையாக நாக சைதன்யா ஆக்சன் திரில்லர் கதையில் நடித்திருக்கிறார். செப்டம்பர் 8-ந் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது.
அந்த விழாவில் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டிருக்கிறார். நாகசைதன்யாவின் படம் வெற்றி பெற வாழ்த்தி பேசியிருக்கிறார். மேலும், முதன்முறையாக அதிரடி ஆக்சன் கதையில் நடித்துள்ள நாகசைதன்யா, இந்த படம் தனக்கு திருப்புமுனை படமாக அமையும் என்று நம்பிக்கை யுடன் இருக்கிறாராம்.

Post a Comment