Ads (728x90)

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் வாணி விஸ்வநாத். தமிழில் மண்ணுக்குள் வைரம் படத்தில் அறிமுகமாகி நல்லவன், பூந்தோட்ட காவல்காரன், தாய்மேல் ஆணை, மை இண்டியா, இது எங்கள் நீதி உள்பட பல படங்களில் நடித்தர். மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த வாணி விஸ்வாத் தெலுங்கிலும் புகழ்பெற்றவர். தெலுங்கிலும் 40 படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

வாணி விஸ்வநாத் ஆந்திர அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நடிகை ரோஜா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து வருகிறார். நல்ல தெலுங்கு பேச்சாளராகவும், நடிகையாகவும் இருப்பதால் அவரது கூட்டங்களுக்கு மக்கள் திரண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ரோஜாவுக்கு இணையாக ஒரு நடிகையை களம் இறக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதற்கு அந்தக் கட்சி தேர்வு செய்த நடிகைதான் வாணி விஸ்வநாத். சில ஆண்டுகளுக்கு முன்பு சந்திரபாபு நாயுடுவை சந்தித்த வாணி விஸ்வநாத் தனது அரசியல் ஆசையை தெரிவித்திருந்தார். சரியான நேரம் வரும்போத கூப்பிடுகிறேன் என்ற அவரும் கூறியிருந்தார் இப்போது அழைத்திருக்கிறார்.

சமீபத்தில் சென்னை வந்த தெலுங்கு தேசம் கட்சியினர், வாணி விஸ்வநாத்தை சந்தித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். விரைவில் அமராவதியில் நடக்கும் கட்சி கூட்டம் ஒன்றில் வாணி விஸ்வநாத் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய இருக்கிறார். அதன் பிறகு ரோஜாவுக்கு போட்டியாக பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget