பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை ஏழாவது நாளாக இன்றும் தொடர்கிறது. மேலும் குறித்த தொழிற்சங்கப் போராட்டத்தில் தொழில்நுட்ப பொறியியலாளர் சங்கம், மின் அத்தியட்சகர் சங்கம் என்பனவும் நேற்று நள்ளிரவு முதல் இணைந்துகொண்டுள்ளன.இதேவேளை தேசிய சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் தமது கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர் சாகல ரத்நாயக்கவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அத்துடன் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன விற்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.
மேலும் மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்கப் போராட்டத்தினால் பல பிரதேசங்களில் மின்துண்டிப்பு இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் மின்சாரத்தைத் துண்டிக்கும் வகையில் சிலர் மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
எனவே மின்பிறப்பாக்கிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கும் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சு நடவடிக்கை எடுத் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment