ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூகப் பேரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள் ளும் நோக்கில் ஜனாதிபதி நேற்று திங்கட்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்தார்.இந்நிலையில் அவர் இன்று ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூகப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.
இந்த உரையின்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் போன்றவை தொடர்பாக உலகநாடுகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment