Ads (728x90)

இத்தாலியின் பிரபல ஓவியரான லியானார்டோ டாவின்சி வரைந்த இயேசு கிறிஸ்து புகைப்படம் ரூ.2939 கோடிக்கு விற்று சாதனை படைத்துள்ளது.

உலகத்தின் ரட்சகர் என்று அழைக்கப்படும் இந்த ஓவியம் லியானார்டோ டாவின்சி வரைந்த ஓவியங்களில்  ஒன்றாகும். தற்போது இந்த ஓவியம்தான் கிறிஸ்டி ஏல நிறுவனத்தால் ரூ.2939 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை ஏலம் எடுத்தவரின் பெயரை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

பாப்லோ பிக்காசோவின் ஓவியம்தான் 1169 கோடிக்கு விற்பனையானதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது டாவின்சி ஓவியம் முறியடைத்துள்ளது.

ஏலம் 300மில்லியன் டாலரைத் தாண்டியபோதே ஏலத்தில் பங்கேற்றவர்கள் கர ஒலி எழுப்பி தங்களது பாராட்டுகளை தெரிவிக்கத் தொடங்கினர். இறுதியில் டாவின்சியின் புகைப்படம் 2939 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.

ஏலம் எடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இந்த ஓவியம் 26 அங்குலம் உயரம் கொண்டது. ஓவியத்தில் இயேசு நீல நிற வண்ணத்தில் ஆடை அணிந்து கொண்டு அவரது ஒரு கை ஆசிர்வதிப்பது போன்ற நிலையில் உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget