
பைரவா படத்திற்கு பிறகு தெலுங்கிற்கு சென்ற கீர்த்தி சுரேஷ், நேனு சைலஜா, நேனு லோக்கல் ஆகிய படங்களில் நடித்தார். அந்த படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து இப்போது பவன் கல்யாண் உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மகாநதி படத்திலும் நடிகை சாவித்ரி வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
திரிவிக்ரம் இயக்கத்தில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக அக்னதாவாசி படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், முதன்முதலாக தனக்குத்தானே தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கிறார். இதையடுத்து கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டரில், முதன்முறையாக தெலுங்கு டப்பிங் வெற்றிகரமாக முடிந்தது. இப்போது நான் முழுமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment