Ads (728x90)

எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யாழ். மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்றைய தினம் காலை 10.45 மணிக்கு தாக்கல் செய்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் குறித்த வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்திலுள்ள ஒரு மாநகரசபை, 3 நகரசபைகள் மற்றும் 12 பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரால் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வரலாற்றில் முதன் முறையாக சிறி லங்கா சுதந்திர கட்சி அனைத்து உள்ளூராட்சி அமைப்புக்களிற்கும்வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது .
இந்த முறை எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் எனது தலைமையின் கீழும் போட்டியிடுகின்றது .

கடந்த காலத்தில் சிறி லங்கா சுதந்திர கட்சி சார்பாக அல்பிரைட் துரையப்பா போன்றோர்கள் எவ்வாறு யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்தார்களோ அதே போன்று எமது உறுப்பினர்களின் ஊடாக நாம் அனைத்து பிரதேச சபைகளிலும் வெற்றி பெற்று எமது அபிவிருத்திகளை செய்ய உள்ளோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget