Ads (728x90)

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளாக திகழும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டில் வர்த்தகப்போர் மூண்டது.

கடந்த மாதம் அர்ஜென்டினாவில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசி இரு தரப்பு வர்த்தக போரை 2019 மார்ச்-1 வரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில், சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தை வருகிற 7, 8 தேதிகளில் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்க இருக்கிறது. இதற்காக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சீனாவுக்கு செல்கிறார்கள்.

இரு நாட்டு துணை நிதி மந்திரிகளும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சீன வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget