தென் சீனக் கடலில் உருவான பபுக் புயல், வங்க கடலில் நுழைந்துள்ளதால், வரும் 8ம் தேதி வரை, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி நேற்று கூறியதாவது:
தென் சீனக் கடலில் உருவான பபுக் புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தாய்லாந்து வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து, இன்று முற்பகலில் அந்தமான் கடல்பகுதியில் நிலைகொள்ளும். இதைத் தொடர்ந்து, இந்த புயல் வலுவிழந்து, மியான்மர் கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த புயல் காரணமாக, அந்தமான் கடல் மற்றும் அந்தமான் தீவுகள் பகுதிகளில் பலத்தக் காற்று வீசும். கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு வரும் 8-ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Post a Comment