Ads (728x90)

கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் உடல் நிலை மோசமடைந்து வருவதையடுத்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 51 ஆயிரத்து 608 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 373 பேர் பலியாகியுள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனுக்கும் கொரோனா பரவியிருந்தமை கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget