அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகிய தமிழர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு அரசியலமைப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி வளர்க்கப்பட்ட நல்லிணக்கத்தை அடையவேண்டும் என்று இலங்கையின் புதிய அரசுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.
இன்று நடைபெற்ற முதலாவது இந்திய – இலங்கை காணொலி தொழில்நுட்ப இருதரப்பு உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
அண்டை நாடுகளுடன் இந்தியாவின் முதல் உச்சிமாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் இரு தலைவர்களும் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
தற்போதுள்ள இருதரப்பு வழிமுறைகள் மூலம் மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தற்போதைய ஆக்கபூர்வமான மற்றும் மனிதாபிமான அணுகுமுறையைத் தொடரவும், வலுப்படுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். இது குறித்து இரு தரப்பிலும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு இரு நாட்டுப் பிரதமர்களும் அறிவுறுத்தினர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா-இலங்கை ஈடுபாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல தனது தலைமையிலான கூட்டணியால் பெறப்பட்ட வலுவான 2/3 பெரும்பான்மையால் வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது உறுதியான தீர்மானத்தை வெளிப்படுத்தினார்.
நீண்டகால நாகரிக தொடர்புகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கு சாட்சியமளித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியையும் அறிவித்தார்.

Post a Comment