தியாக தீபம் திலீபனுக்கு யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக நேற்று முன்தினம் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மாணவர்கள் முழந்தாளிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
திலீபனின் நினைவுகூரலுக்கு பொலிஸார் நீதிமன்றம் ஊடாக தடை விதித்துள்ள நிலையில் மாணவர்களால் இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தலைத் தடுக்க பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த நினைவு கூரல் இடம்பெற்றுள்ளது.

Post a Comment