ஐ.பி.எல். தொடரின் 7 ஆவது போட்டி மஹேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே இன்று துபாயில் நடைபெற்றது.
டெல்லி அணிக்கு எதிரான இப்போட்டியில் சென்னை அணி 44 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணியின் தலைவர் தோனி, துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை டெல்லிக்கு வழங்கினார். அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை குவித்தது.
176 என்ற இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 44 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இத்தொடரில் சந்திக்கும் இரண்டாவது தோல்வி இதுவாகும்.

Post a Comment