Ads (728x90)


கொரோனா தொற்று நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க மற்றும் மத்தளை சர்வதேச விமான நிலையங்கள் 09 மாதங்களின் பின்னர் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீள திறக்கப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் முதலாவது விமானம் 50 இலங்கையர்களுடன் இன்று நாட்டுக்குள் வந்துள்ளது. ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து 50 இலங்கையர்கள் குறித்த விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களை தவிர மாலைதீவு, பாகிஸ்தான், துருக்கி மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் மேலும் 300 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக கொவிட் 19 தொற்றுப் பரவலை தடுக்கும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget