Ads (728x90)

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் மார்ச் 06 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் பெப்ரவரி 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதி பாடசாலைகள் யாவும் மீள ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. முன்னய அறிவித்தலில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget