Ads (728x90)

கொழும்பில் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற வன்செயல்கள் தொடர்பாக  நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலான் ஜயதிலக்க மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த 22 சந்தேக நபர்கள் தொடர்பில் நேரடி, சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப சாட்சியங்கள் இருப்பின் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமாறும், கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

சந்தேகநபர்கள் அவர்களின் முகவரிகளில் இல்லாவிடின் சாட்சியங்களை முன்வைத்து அவர்களைக் கைது செய்வதற்கு நீதவான் ஒருவரிடமிருந்து திறந்த பிடியாணையைப் பெற வேண்டும் என்றும்,  உரிய முகவரிகளில் காணப்படாத சந்தேக நபர்களைக் கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget