சூடான் நாட்டு இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் இஷாம் முகம்மது ஹசன் கரர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை நேற்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.இச் சந்திப்பின் போது கடற்படை பயிற்சி நடவடிக்ககைள், கூட்டுப்பயிற்சி திட்டங்கள் மற்றும் இரதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக ஆரோக்கியமான விவாதங்களில் இரு தரப்பினரும் ஈடுபட்டனர்.
கலந்துரையாடலின் இறுதியில் குறித்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
Post a Comment