Ads (728x90)

பாடசாலை விளையாட்டு வீரா்களை ஊக்குவிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ”விளையாட்டு சக்தி” (கிரீடா சக்தி) நிதியத்தின் ஊடாக, 1,500 பாடசாலை விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தலா ரூபா 10,000 போஷாக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சில் நடைபெற்றது. 

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதற்கட்டமாக 100 பாடசாலை விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு அடையாள ரீதியாக இக்கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

மாகாண மட்டத்திலான விளையாட்டு அணிகளில் உள்ள 15 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கால்பந்து, தடகளம் ஆகிய விளையாட்டுகளில் ஈடுபடும் மாணவர்களும், அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

இதற்கமைய ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், பெட்மின்டன், மேசைப்பந்து, மல்யுத்தம், குத்துச்சண்டை, கராத்தே-டோ, ஜூடோ, ஹாக்கி, நீச்சல், கூடைப்பந்து, கபடி,, ஸ்குவாஷ், கெரம் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளுக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்படுகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget