Ads (728x90)

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, வழக்கு ஒன்றுக்கு நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். இதற்கு மேலதிகமாக, அந்த வழக்குகளுக்காக 18 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

தீர்ப்பை அறிவித்து மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிடுகையில், பிரதிவாதிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுகளை, நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் முறைப்பாட்டாளர்கள் நிரூபித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். 

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பொருளாதாரம் வங்குரோத்தடைவதற்கும் இத்தகைய செயல்கள் வழிவகுத்துள்ளன என வழக்குத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்காக மூன்று வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட போது, அவற்றின் உரிமையாளர்களுக்கு சாதகமாகச் செயற்பட்டு அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த நான்கு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.


Post a Comment

Recent News

Recent Posts Widget