Ads (728x90)


ஒவ்வொருவரும் நம் வீட்டில் லட்சுமி குடியிருந்து நமக்கு அருள வேண்டும் என்று ஆசைப்படுவோம் ஆனால் அதற்கு உண்டான முறைகளை செய்வதில்லை.

அப்படியே செய்தாலும் முறையாக செய்வதில்லை இதற்கு ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு, நவ தானியம், புனுகு, குங்கும பூ, கஸ்துரி, ஜவ்வாது, ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு, இவை அனைத்தையும் வியாழக்கிழமையே வாங்கி வைத்துக்கொள்ளவும்.

வெள்ளிகிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் சுக்கிர ஹோரையில் மேற்கூறிய அனைத்து பொருளையும் கலசத்தில் இட்டு மண்கலசத்திற்கு விபூதி பட்டையிட்டு சந்தனம் குங்குமம் வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ என்றும் என் குடும்பத்தில் இருந்து அருள வேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில் வைக்கவும்.

இதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம் கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, தொடர்ந்து வணங்க தொடங்கியதும் சிறிது சிறிதாக பணவரவு உயர்வதை  உணரலாம். இந்த எளிய பரிகார முறையை செய்து பயன்பெறுங்கள்.

108முறை கூற வேண்டிய மந்திரம்:

ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ

Post a Comment

Recent News

Recent Posts Widget