அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்டு உள்ள வீடியோ ஒன்றில் விண்ணில் ஒரு மர்ம பொருள் வெளிச்சத்துடன் பாய்ந்து செல்வது போல் உள்ளது. இது என்ன பொருள் என தெரியாமல் நிபுணர்கள் மகுழம்பி போய் உள்ளனர். வீடியோ குறிப்பில் எந்த தகவலும் வெளியிடபட்டவில்லை.ஆனால் இந்த பொருள் விண்கல்லோ அல்லது நெருப்பு பந்தோ அல்ல.
நாசாவின் தென் கிழக்கில் உள்ள 5 நாசா கேமிராக்கள் இதனை படம் பிடித்து உள்ளன. இந்த பொருள்,ஒளியை உமிழ்ந்து கொண்டு மணிக்கு 14,500 மைல் வேகத்தில் நகர்ந்து செல்கிறது.ஆனால் இந்த வேகம் விண்கற்களை விட குறைந்த் வேகமாகும். புவீஈர்ர்ப்பு விசையில் இருந்து இந்த பொருள் மேல் நோக்கி செல்கிறது விண்கற்கலாக இருந்தால் அது கீழ் நோக்கிதான் நகரும்.
‘தேவதைகளா? பறவைகளா? என்ன இந்த மர்ம பொருள்’ என்று தலைப்பிட்ட இந்த வீடியோவை பலரும் நம்பவில்லை. ஆனால், வீடியோவை பார்க்கும் போது ஒரு சிறிய பூச்சி போல ஏதோ பறந்து மேல்நோக்கி செல்வதை காண முடியும். விண்ணில் இருந்து பறக்கும் தட்டு, மர்ம பொருள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஆராய்ச்சியாளர்கள், இப்படி திட்டமிட்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தபட்டு உள்ளது என கூறினர். நாசா வாய் திறக்காதவரை இந்த மர்மம் விலகாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளார்கள்.
Post a Comment