Ads (728x90)



சிகர்களின் சக்தி பெரிய சக்தி என்பது நாமறிந்ததே. தற்போது அதற்கு இன்னொரு சான்றாக விஜய், அஜித் ரசிகர்கள் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். அதிலும் அஜித் ரசிகர்கள் இதில் அதீத ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

ஐ.நா மன்றம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது. இப்போது வரை 8.43 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கிறது.

இன்னும் 6 ஆறு நாட்களே இருக்கும் நிலையில், அஜித் ரசிகர்கள் தங்கள் முகநூல் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஷேர் செய்து ஓட்டுக்களை போட சொல்லி தங்களது நண்பர்களை கேட்டு வருகின்றனர். இதுதவிர்த்து பலரும் நம் சினிமா விகடனின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலேயே ஒவ்வொரு போஸ்டிற்கும் கீழ் லின்குகளை பகிர்ந்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதற்கான லின்க்கையும் முக நூலின் பல பக்கங்களில் தற்போது காணமுடிகிறது.

ஒரு டீஸர் வெளியானால் பல லட்சத்தை எளிதாக தாண்டச் செய்கிறோம். ஒரு சினிமாவின் டிரெய்லர், டீஸர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பங்கை கொடுங்கள் என ஆரம்பித்து பலரையும் குறிப்பிட்ட லின்கில் வாக்களிக்கும்படி கேட்டு வருகிறார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget