Ads (728x90)

டுவிரல் அல்லது பெரு விரல் என்று குறிப்பிடப் படும் இது, உள்ளங்கை சனி மேட்டில் உற்பத்தியாவ தால், சனி விரல் எனப்படுகிறது. இதனை வடமொழியில் ‘மத்தியமா’ என்கிறோம். ஒருவனது வெற்றி, செல்வம், செல்வாக்கு முதலியவற்றை இந்த விரலின் அமைப்பு விளக்குகிறது.
சூரிய விரல்
கட்டை விரலுக்கு மூன்றாவதாக சூரிய மேட்டில் உற்பத்தியாகும் இந்த விரல் சூரிய விரல். இது மோதிர விரல் என்று குறிப்பிடப்படுகிறது. இதை பவித்திர விரல் என்றும் குறிப்பிடுவார்கள். அதனால்தான், பூஜை, புனஸ்காரங்கள் செய்யும் பொழுது, தர்ப்பையால் ஆன பவித்திரத்தை இந்த விரலில் அணிகிறோம். இதற்கு வடமொழியில் ‘அனாமிகா’ என்று பெயர். ஒரு மனிதனின் புகழ், பெருமை, இந்த விரலின் அமைப்பால் தெரியும்.
புதன் விரல்
கனிஷ்டிகா என்று குறிப்பிடப்படும் இதை, சுண்டு விரல் என்கிறோம். புதன் மேட்டில் உற்பத்தியாகும் இந்த விரல், புதன் விரல் எனப்படும். இதன் அமைப்பு திருமணம் குடும்ப வாழ்க்கைப் பற்றிய பல விவரங்களைத் தருகிறது.
அடுத்ததாக, ஒட்டுமொத்தமாக விரல்களின் அமைப்பைக் கொண்டு சில விவரங்களைக் காண்போம்.
விரல்கள் உள்ளங்கைகளை நோக்கி வளைந்திருக் குமானால் (படம் - 5) அவர்களுக்கு உலகப் பற்றுடன், தன்னைப் பற்றிய சிந்தனையும், சுய நலமும் மிகுதியாக இருக்கும். அவர்கள் தமது காரியங்களில் சிரத்தையாகவும் கவனமாகவும், ஈடுபாட்டுடனும் செயல்படுவார்கள்.
விரல்கள் புறங்கைப் பக்கமாக வளைந்திருந்தால், (படம் - 6) அவர்கள் பிறர் நலம் கருதுபவர்களாகவும், தாராள மனப்பான்மை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
இரண்டு விரல்களுக்கு இடையே உள்ள இடை வெளியும் ஓரளவு சில குணங்களை பிரதிபலிக்கும்.
1. கட்டை விரலுக்கும், குரு விரலுக்கும் இடையே இடைவெளி அதிகமாக இருந்தால், (படம் - 7) அவர்கள் அன்பு, பண்பு, மனித நேயம் உடையவர்களாக இருப்பார்கள்.
2. குரு விரலுக்கும், சனி விரலுக்கும் மத்தியில் அதிகமாக இடைவெளி இருக்குமானால் (படம் - 8) அவர்கள் சுயமாக சிந்தித்து செயல்படுபவர்கள். மனதில் பட்டதைப் பளிச்சென்று சொல்பவர்கள்.
3. சனி விரலுக்கும் சூரிய விரலுக்கும் அதிக இடைவெளி இருந்தால் (படம் - 9) அவர்கள் பொருளையும், வசதியையும் மட்டும் விரும்புபவர்கள், புகழுக்காக பொருளைத் தியாகம் செய்யாதவர்கள்.
4. சூரிய விரலுக்கும், புதன் விரலுக்கும் மத்தியில் இடைவெளி அதிகமாக இருந்தால், (படம் - 10) அவர்கள் குற்றம் செய்வதிலும், பிறருக்கு தீங்கு இழைப்பதிலும் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
விரல்களின் மொத்த தோற்றத்தை வைத்து, அவற்றைக் கூர்மையான விரல்கள் என்றும், தட்டையான விரல்கள் என்றும் பிரிக்கலாம்.
1. விரலின் அடிப்பாகத்தில் இருந்து மேல்பாகம் கூர்மையாக அமைந்தால், அவர்கள் உயர்ந்த எண்ணங்கள், உயர்ந்த செயல்கள், கலைத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். இந்த அன்பர்களிடம் மனிதநேயம் மிகுந்திருக்கும். தத்துவ மேதைகள், ஆன்மிக ஞானிகள், கலைஞர்கள் ஆகியோரின் விரல்கள், இந்த அமைப்பைப் பெற்றிருக்கும்.
2. விரல் நுனிகள் தட்டையாக இருந்தால், அவர்கள் திறமையாக வேலை செய்பவர்களாகவும், கடுமையான உழைப்பாளிகளாகவும், பிறரோடு சேர்ந்து வேலை செய்வதில், திறமை மிக்கவர்களா கவும், எடுத்த காரியத்தை திறம்பட முடிப்பவர்களா கவும் இருப்பார்கள். தொழில் அதிபர்கள், அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், திறமைமிக்க தொழிலாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களின் விரல்கள், இந்த அமைப்பைக் கொண்டிருக்கும்.
ஒரு சில விரல்கள் முதல் வகை அமைப்பிலும், மற்ற விரல்கள் இரண்டாவது வடிவமைப்பிலும் இருந்தால், அவர்கள் மேலே குறிப்பிட்ட இரண்டு குணங்களும் கலந்தவர்களாக இருப்பார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget