Ads (728x90)


ம் பாரத பூமியில், நீர் வளம் சேர்க்கும் ஆறுகள் அனைத்தும் தெய்வ அம்சம் பொருந்தியவையாகக் கொண்டாடப்படுகின்றன. கங்கையை போலவே புனிதமாகக் கருதப்படும் மற்றொரு ஆறு யமுனை. அந்த யமுனை பூமிக்கு வந்த திருநாளே 'யமுனா ஜெயந்தியாகச் சிறப்பிக்கப்படுகின்றது.

யமுனை, சூரிய தேவனின் புத்திரியாவர் யமதர்மராஜனுடன், இரட்டையாகப் பிறந்த சகோதரி. இவளது மற்ற பெயர்கள், யமி, காளிந்தி என்பன. சூரிய தேவனுக்குப் பிடித்தமான மகள் இவள். ஏனெனில் இவள் உடன்பிறந்த மற்ற அனைவரும் ஆண் மக்களே. அந்தக் காரணத்தால், யமுனைக்கு, 'சூர்யதநயா, ரவிநந்தினி, சூர்யஜா' என்ற பெயர்களும் உண்டு.

யமதர்மராஜர், இறப்புக்குரிய தெய்வமாக சித்தரிக்கப்படுவது போல், யமுனை, வாழ்வைத் தருபவளாகச் சிறப்பிக்கப்படுகிறாள்.. ரிக் வேதத்திலும், அதர்வண வேதத்திலும், யமுனையைப் பற்றிய குறிப்புகள் வருவதாகச் சொல்லப்படுகின்றது..

யமுனையில் நீராடுவோர் மரண வேதனையிலிருந்து விடுபடுவர் என்பது ஐதீகம்.

யமுனை ஆறாக உருவெடுத்த தினமாக, வசந்த நவராத்திரியின் ஆறாவது தினம் சொல்லப்படுகின்றது. இது தீபாவளி முடிந்த பின் வரும் சஷ்டி தினமாகும். இந்த தினத்தன்று யமுனா ஜெயந்தி விரதம் இருந்து

யமுனை நதி பாயும் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக, மதுராவில், இது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.. அன்றைய தினம் விரதம் இருந்து யமுனைக்கு பூஜைகள் செய்து மலர்கள் தூவி வழிபாடுகள் செய்யப்படுகின்றது. யமுனை நதியில் அன்று நீராடுவது சிறப்பு.

தீபங்கள் ஏற்றி, யமுனையில் மிதக்க விட்டு, தீப வழிபாடும் செய்யப்படுகின்றது. அன்றைய தினம், 'யமுனா மையா கி ஜெய்' என்ற கோஷத்துடன் பக்தர்கள் நீராடுகின்றனர். இவ்வாறு பூஜிப்பவர்கள், யமுனையின் அருளால், ஸ்ரீகிருஷ்ணரின் அனுக்கிரகத்துக்கும் பாத்திரமாவார்கள் என்பது நம்பிக்கை..

யமுனையில் நீராட இயலாதோரும், தம் இல்லங்களில், நீர் நிரம்பிய பூரண கலசத்தில், யமுனையை ஆவாஹனம் செய்து பூஜை செய்யலாம். யமுனையுடன் ஸ்ரீகிருஷ்ணரின் சிறிய சிலையை வைத்துப் பூஜிக்க, எல்லா நலமும் வளமும் பெறலாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget