
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பலன் இழந்து இருந்தால் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்விரதத்தை சுக்கிரவார விரதமென்றும் கூறுவார்கள். வெள்ளியன்று விரதமிருந்து அம்பாளையும் முருகனையும் வணங்கி விரதம் அனுசரிக்கப்பட வேண்டும். சிலர் அவர்களது இஷ்டதெய்வங்களை வணங்கி மேற்கொள்வதுமுண்டு.
நவக்கிரக சந்நிதியை வலம் வந்து சுக்கிர பகவானை வணங்க வேண்டும். அப்போது
மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய்
வையம் காக்கவான் மழை பெய்விக்கும் கவிமகன்
கனகம் ஈவோன் தீர்கவா னவர்கள் போற்றச் செத்தவர்
தமை எழுப்பம் பார்க்கவன் சுக்கிரன் தன் பாத பங்கயங்கள் போற்றி! '
என்ற தோத்திரத்தைப் பாடி வணங்குவதனால் புகழ், செல்வங்கள் பெருகுவதோடு பாவக்கிரகங்களின் பார்வையினால் பலமிழந்திருக்கக்கூடிய சுக்கிர பகவான் தொல்லைகள் நீங்கப் பெற்று நற்பலன்களை அளிப்பார்.
Post a Comment