
நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விமலை பீடம் என்று அழைக்கப்படுகிறது.
கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது.
உலகம்மைக்கு அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பதாக நம்புகின்றனர்.
நெல்லை மாவட்டத்தை சுற்றிலும் இருக்கும் மக்கள் திதி உள்ளிட்ட கர்ம காரியங்களை இங்குள்ள தாமிரபரணி நதிக்கரையில் செல்கின்றனர். கோவிலுக்கு எதிரேயே அழகாக சில்லென ஓடுகிறது தாமிரபரணி ஆறு. கோவிலுக்கு மேலே மலைப்பாதையில் சென்றால் நோய்கள், பாவங்கள் தீர்க்கும் அகத்தியர் அருவி உள்ளது. இப்படியாக இயற்கை எழிலுடன் பாபநாசம் பாபவிநாசர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நீராடி இவரை வழிபட்டால் பாவம் அனைத்தும் நாசமாகும் என்பது நம்பிக்கை.
Post a Comment