Ads (728x90)

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் விளையாடி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 190 ரன்கள் குவித்தது.
 
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 125 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து லீவிஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.  ஒருநாள் தொடர் போட்டியில் பெற்ற தோல்விக்கு இந்த வெற்றியின் மே.இ.தீவுகள் அணி இந்தியாவை பழிவாங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget