Ads (728x90)

இன்று நமீதா வெளியேற்றப்படுகிறார் என செய்திகள் உலா வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 4 பேர் வெளியேறியுள்ளனர். அடுத்து வெளியேற்றப்படுபவர் வரிசையில் கணேஷ் வெங்கட்ராம், ஓவியா, நமீதா ஆகியோர் உள்ளனர். ஆனால், ஓவியாவிற்கு அதிக ஓட்டுகள் விழுவதால், அவர் ஒவ்வொரு வாரமும் தப்பித்துக் கொண்டே வருகிறார்.
 
பெரும்பாலானோருக்கு நமீதா, ஜூலி, காயத்ரி ரகுராம் ஆகியோரின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. இது சமூக வலைத்தளங்களில் எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில், இன்று நமீதா வெளியேறுகிறார் என்ற செய்தியும், அதற்கான புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நமீதா, அரங்கில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருப்பதுபோல் காட்சி இடம்பெற்றுள்ளது.
 
எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நமீதா இன்று வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget