Ads (728x90)

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்சார் நடைமுறைகள் காலதாமதம் ஆனதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படம் சென்சார் முடிந்து படத்திற்கு 'யூ' சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்த படம் வரும் ஆகஸ்ட் முதல் வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆகஸ்ட் 10ஆம் தேதி அஜித்தின் 'விவேகம்' திரைப்படம் ரிலீஸ் ஆவதால் அதற்கு முன்பே அதாவது ஆகஸ்ட் முதல்வாரமே 'விஐபி 2' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget