அது பித்தநீரை உற்பத்தி செய்து அமிலம் கலந்த உணவு சுமுகமாக செரிமானம் ஆவதற்கு துணைபுரிகிறது. கல்லீரல் பாதிப்புக்குள்ளானால் செரிமான கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும். கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் இருக்கும் குளோரோபில், நச்சுக்களை வெளியேற்ற உதவும். பூண்டுவையும் சமையலில் சேர்க்க வேண்டும். அதிலிருக்கும் அசிலின் கல்லீரல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
பீட்ருட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் இரைப்பையின் செயல் திறனை அதிகரிக்க உதவுகிறது. தேன் கல்லீரலில் உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க துணைபுரியும். தேங்காய் எண்ணெய்யையும் சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். அதில் இருக்கும் நல்ல கொழுப்பு அமிலம் உடல் நலனுக்கு நன்மை சேர்க்கும். கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும். கிரீன் டீ பருகி வருவதும் கல்லீரலின் சீரான இயக்கத்திற்கு துணை புரியும். தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் சாப்பிட்டு வரலாம். அதிலிருக்கும் தாதுக்கள் கல்லீரலுக்கு நலம் சேர்க்கும்.

Post a Comment