எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டுமானால் அது தொடர்பான விசேட திருத்த சட்டமூலம் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டால் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகள் திருத்த சட்டமூலம் தொடர்பிலும் இதில் பெண்களுக்கான ஒதுக்கீடு குறித்தும் ஆராய்வதற்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட் சித் தலைவர்கள் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டம் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், பைஸர் முஸ்தபா, தலதா அத்துக்கோரள, இராஜாங்க அமைச்சர்களான திருமதி விஜயகலா மகேஸ்வரன், சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, பிரதி அமைச்சர்களான அனோமா கமகே, அஜித் பி பெரேரா எம்.பி.க்களான எம்.ஏ.சுமந்திரன், அனுரகுமார திஸாநாயக்க, பிமல் ரத்நாயக்க, டக்ளஸ் தேவானந்தா உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி சபைகள் திருத்த சட்டமூலத்தில் இடம்பெற வேண்டியுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. இதன்போது கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய,
மேற்படி விடயம் தொடர்பாக ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுக்கு புதிய திருத்தங்களை உட் சேர்த்துக் கொள்வதற்கான கலந்துரையாடல்களில் தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலர்கள் கலந்துகொள்வது, தேர்தலை பிரச்சினையின்றி நடத்துவதற்கு ஏற்படக்கூடிய வசதியீனங்களைத் தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு, தேவையான விடயங்களை சுட்டிக்காட்டுவதற்காக என்பதை கருத்திற்கொள்வது பொருத்தமாகும்.
ஏனெனில், தேர்தல் முறை அல்லது வட்டாரங்கள் மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையூடாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற பிரதி நிதிகளே விகிதாசாரத்தில் மாற்றம் மேற் கொள்ளல் போன்ற கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பாக உத்தியோகபூர்வ கருத்தொன்றை இச்சந்தர்ப்பத்தில் ஆணைக் குழுவினால் தெரிவிப்பது பொருத்தமற்றதென்ற காரணத்தினாலாகும்.
எவ்வாறிருப்பினும் வட்டாரங்கள், விகிதாசார பிரதிநிதித்துவம் ஆகிய விகிதாசாரம் 70:30 ஐ விட மாற்றப்பட வேண்டுமென மற்றும் விகிதாசார முறையின் கீழ் பிரதிநிதியொருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான 5% ஆகக் குறைந்த எல்லையைக் குறைத்தல், உறுப்பினர் எண்ணிக்கை அதிகளவில் அதிகரித்துக் காணப்படல் போன்ற விடயங்கள் தொடர்பாக அரசியல் கட்சி முகவர்களினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென்பதை உங்களுக்கு அறிக்கையிட விரும்புகின்றேன்.
அத்தகைய கொள்கை ரீதியான விடயங்களை திருத்தம் செய்தல் அல்லது திருத்தம் செய்யாதிருத்தல் தேர்தலை நடத்துவதற்கு தடையொன்றல்ல என்பதோடு, எவ்வாறா யினும், புதிய திருத்தங்களை மேற்கொள் வதனூடாக ஏற்கனவே தாமதமடைந்துள்ள உள்ளூரதிகார சபைத் தேர்தலை நடத்துவது மேலும் தாமதமடைவதை தவிர்த்துக் கொள்வதற்கு கட்டாயமாகுமென்பது ஆணைக் குழுவின் கருத்தென்பதை மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வட்டாரங்கள் மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறை என்பவற்றினூடாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற எண்ணிக்கைகளில் மாற் றங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாயின், கீழே காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக விசேட கவனத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அ. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர் எண்ணிக்கையில் அதிகரிப்பொன்றை மேற்கொள்ளாமை.
ஆ. மீண்டும் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளாமை.
இ. 25% பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதன் தேவைப்பாடு.
ஈ. இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கு சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்திக் கொடுத்தல்.
முக்கியமான விடயம் யாதெனில் உடனடியாக இவ் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கையெடுப்பதாகும். 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இத்தேர்தலை நடத்த முடிவது புதிய விசேட திருத்தங்களுடன் அல்லது திருத்தங்களின்றி 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூரதிகார சபைத் தேர்தல் (திருத்தச்) சட்டத்தின் தொழில்நுட்ப ரீதியான வழுக்களை நீக்கும் வரைவை 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் வாரத்தினுள் (அல்லது 3 ஆம் வார ஆரம்பத்தில்) பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால் மாத்திரமென்பதை சுட்டிக்காட்டுகின்றோம். 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டத்தில் குறிப்பிட்டுள்ள உத்தேச வட்டார முறை, தோல்வியடைந்த வேட்பாளர் வாக்குகளுக்கான விகிதாசார பிரதிநிதித்துவ முறை மற்றும் முழுமையான விகிதாசார பெண்கள் பிரதிநிதித்துவ முறை ஆகிய மூன்று முறைகளையும் ஒரே முறையில் பயன்படுத்துகின்ற தேர்தல் முறையொன்று தொடர்பான எவ்வித அனுபவமும் இல்லையென்பதால், சட்டம் நிறைவேற்றப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்ப டுவதற்கு 75 நாட்கள் காலமொன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு தேவைப்படுவதே இத ற்கான காரணமாகும்.
பாராளுமன்ற அல்லது சட்டவாக்க சபை விதிக்கின்ற விதத்தில் அல்லது சட்டம் வகுக்கின்ற விதத்தில் நீதியான மற்றும் சுதந் திரமான தேர்தல்களை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பென்பதால், அப்பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தினால் விதிக்கப்படுகின்ற விதத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு தேர் தல் ஆணைக்குழு எப்போதும் தயாராக வுள்ளதென்பதை மீண்டும் தயவன்புடன் அறியத்தருகின்றோம் என்று தெரிவித்துள் ளார்.

Post a Comment