Ads (728x90)

அமெரிக்க பார்லிமென்டில், சபாநாயகர் அறையில், முழுக்கை சட்டையுடன் மட்டுமே, பெண்கள் வர வேண்டும் என்ற விதியை எதிர்த்து, 30க்கும் மேற்பட்ட பெண், எம்.பி.,க்கள், 'ஸ்லீவ்லெஸ்' எனப்படும், கையில்லாத சட்டை அணிந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அமெரிக்க பார்லியில், சபாநாயகர் அறைக்குள், உறுப்பினர்களும், நிருபர்களும் நுழைய, ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள், முழுக்கை சட்டையுடன் மட்டுமே வரலாம்; ஆண்கள், சட்டை, டை அணிந்து வர வேண்டும். இந்த விதியை மீறும் வகையில்,கையில்லாத, 'ஸ்லீவ்லெஸ்' சட்டை அணிந்து வந்த ஒரு பெண் நிருபர், சபாநாயகர் அறைக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பப்பட்டார். இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

 சபாநாயகர் அறைக்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள விதிகள், பழங்காலத்தியவை என்றும், பெண்கள் தாங்கள் விருப்பப்படும் ஸ்டைலில் ஆடைகள் அணியலாம் என்றும் கூறி, ஏராளமான பெண்கள் கருத்து தெரிவித்திருந்தனர். பார்லியில் நேற்று முன்தினம், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பெண், எம்.பி.,க்கள், ஸ்லீவ்லெஸ் சட்சடை அணிந்து வந்து, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆடைக்கட்டுப்பாட்டுக்கு எதிரான கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget