Ads (728x90)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியாருவார்கள் என்பதை தீர்மானிக்கும் எவிக்‌ஷனுக்கான நாமினேஷனில் எதிர்பாராத திருப்பமாக ஓவியாவின் நண்பராக பிக் பாஸ் வீட்டில் இருந்த ஒரே நபர் ஆரவ்வும் தற்போது 

ஓவியாவுக்கு எதிராக திரும்பியுள்ளார்.பிக் பாஸ் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு வாரமும் நாமினேட் ஆகி வருகிறார் நடிகை ஓவியா. ஆனால் அவரது மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தால் தொடர்ந்து அமோக ஆதரவை பெற்று பிக் பாஸ் வீட்டில் ஓவியா தொடர்ந்து வருகிறார்.
 
இந்நிலையில் இந்த வாரமும் ஓவியா நாமினேஷனில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியான புரோமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டில் ஓவியாவின் நெருங்கிய நண்பராக இருக்கும் ஆரவ் ஓவியாவை வெளியேற்ற நாமினேட் செய்கிறார்.
 
இதனை பார்த்து ஓவியாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த வாரம் ஜூலியை சிகப்பு கம்பளத்தில் வைத்து இழுத்து தடுமாறி விழ வைத்ததில் ஆரவ் ஓவியா மீது அதிருப்தியில் இருந்தார். அதன் காரணமாகவே ஆரவ் ஓவியாவை நாமினேட் செய்துள்ளார். ஆனால் ஓவியா ஜூலியிடம் அப்படி நடந்து கொண்டதற்கு உண்மை காரணம் என்ன என்பது ஓவியாவின் நெருங்கிய நண்பராக இருக்கும் ஆரவ்வுக்கு தெரியாமல் போனது தான் ஆச்சரியம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget