Ads (728x90)


ஸ்மார்ட்போனில் வாழ்த்து செய்தி அனுப்புவதாக இருந்தாலும் சரி, சாதாரண வாட்ஸ் அப் செய்தி அனுப்புவதாக இருந்தாலும் சரி, இமோஜி எனப்படும் சித்திர எழுத்துகளை நாடுவதே பலரது வழக்கம். தேவையான இமோஜிகளை தேர்வு செய்யும் வசதி போன் விசைப் பலகையிலேயே இருக்கிறது என்றாலும், இதற்கென பிரத்யேக செயலிகளும் இல்லாமல் இல்லை. அந்த வகையில் ‘டெக்ஸ்ட் டு இமோஜி’ செயலி வார்த்தைகளை இமோஜிகளாக மாற்றித்தருகிறது.

இதில் உள்ள தேடல் கட்டத்தில் ஆங்கில வார்த்தைகளை டைப் செய்து அதற்கு பொருத்தமான இமோஜிகளை கண்டுபிடிக்கலாம். இது தவிர ஆயிரக்கணக்கான இமோஜிகளிலிருந்தும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இமோஜி வாசகங்களை விருப்பம்போல மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இவற்றை சமூக ஊடகங்களில் பகிரும் வசதியும் இருக்கிறது. இமோஜிகளை நகலெடுக்கும் வசதியும் இருக்கிறது. இமோஜி பிரியர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவமாக இந்தச் செயலி அமைந்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget