
வடகொரியாவை ஏதாவது ஒரு வகையில் தண்டிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். போலந்து தலைநகர் வார்சாவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட அதிபர் ட்ரம்ப் நேற்று அந்த நாட்டு அதிபர் ஆண்ட்ரேஜ் டூடாவை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பின்னர் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது:
வடகொரியாவின் நடவடிக் கைகள் மோசமாக உள்ளன. அந்த நாட்டை ஏதாவது ஒரு வகையில் தண்டிப்போம். அது ராணுவ நடவடிக்கையா, வேறு நடவடிக் கையா என்பது குறித்து இப்போது பகிரங்கமாக கூற முடியாது. சர்வதேச அச்சுறுத்தலாக வடகொரியா உருவெடுத்துள்ளது. அந்த நாட்டுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வடகொரியா தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நேற்று முன்தினம் நடை பெற்றது. இதில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பேசியதாவது: வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய நாளை கறுப்பு தினமாக கருதுகி றோம். அந்த நாட்டுடன் சீனாவும் ரஷ்யாவும் கைகோத்து செயல் படுவது கவலையளிக்கிறது. வடகொரியாவின் அச்சுறுத்தல் களைச் சமாளிக்க போதிய பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்துள் ளோம். தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். வடகொரியாவின் வர்த்தகம் 90 சதவீதம் சீனாவைச் சார்ந்து நடைபெறுகிறது. இதனால் ஐ.நா. சபை விதிக்கும் பொருளாதார தடைகள் வடகொரியாவைப் பெரிதும் பாதிப்பதில்லை என்று அமெரிக்க, ஐரோப்பிய பொருளா தார வல்லுநர்கள் தெரிவித்துள் ளனர்.
Post a Comment