Ads (728x90)

பிக் பாஸ் நிகழ்ச்சிதான் இப்போதைக்கு செம ஹாட். இந்த நிகழ்ச்சியை பெரும்பாலும் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சி தொல்வி அடைந்துவிட்டதாக கருத முடியாது. ஏன்னென்றால் என்ன நடக்கிறது என்ன பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருவகையில் வெற்றி பெற்றது என்று கூறலாம். வணிக ரீதியாக வெற்றிப் பெற்றுள்ளது.
நிகழ்ச்சி நன்றாக இல்லை என யாரும் பார்க்காமல் இல்லை. அதில் நடப்பதை கேலி செய்வதற்காக சிலர் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு உள்ளது. இதுவரை 3.6 பேர் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து இன்னும் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. எதன் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. டிஆர்பி ரேட்டிங்? அல்லது இணையதளம் பார்வையாளர்கள்?. இரண்டில் எந்த கணக்கில் புள்ளி விவரம் வெளியிடப்பட்டது என்பதில் சந்தேகம் உள்ளது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget