இங்கிலாந்தில் முதல்முறையாக ஆண் ஒருவர் கர்ப்பமுற்று, அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். தென்மேற்கு இங்கிலாந்தின் கிளாஸ்டர்ஷையர் மாவட்டத்தில் உள்ள குளோசெஸ்டர் நகரைச் சேர்ந்தவர் ஹைடன் கிராஸ் (21). இவர் பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தார். எனினும் வளரும்போது தன்னை ஆணாக உணர்ந்தார்.
இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு நிதியுதவியுடன் தன்னை முழுமையாக ஆணாக மாற்றிக் கொள்வதற்கான சிகிச்சையை மேற்கொண்டார். சட்டப்பூர்வமாக அவர் ஆண் என்று அங்கீகரிக் கப்பட்டார். எனினும் தனது கரு முட்டைகளை அவர் தொடர்ந்து பாதுகாத்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் குழந்தை பெற்றுக் கொள்ள ஹைடன் கிராஸ் விரும்பினார். அவருக்கு சமூக வலைதள நண்பர் ஒருவர் விந்தணுவை தானமாக அளித் தார். அதன்மூலம் கடந்த ஆண்டு செப்டம்பரில் செயற்கை கருவூட் டல் முறையில் அவர் கர்ப்பமுற்றார்.
கடந்த ஜூன் 16-ம் தேதி கிளாஸ்டர்ஷையர் ராயல் மருத்துவமனையில் ஹைடன் கிராஸுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு டிரினிட்டி லெய்க் என்று பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து ஹைடன் கிராஸ் கூறியபோது, அறுவைச் கிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. சராசரி எடையுடன் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இனிமேல் முழு ஆணாக மாறுவதற்கான சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.
இங்கிலாந்தில் சட்டபூர்வமாக ஆண் என்று அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் குழந்தை பெற்றது இதுவே முதல்முறையாகும்.

Post a Comment