Ads (728x90)

வெள்ளரிச்சாற்றிற்கு பதிலாக வெள்ளரிகையை நறுக்கி கண்களின்மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.

 பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களைச்சுற்றித் தடவி வர கருவளையம் மறையும்.

 தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதைத்தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.

 வெள்ளரிச்சாற்றுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். ஒரு நாளைக்கு இரு முறை செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

பால் பவுடரை தண்ணீரில் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களைச் சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய்சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும்வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.

 போதியளவு தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 8 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget