Ads (728x90)


‘கமலுக்குப் பின்னால் கலையுலகம் நிற்கும்’ என்று விஷால் சொன்னதைக் கேள்விப்பட்ட கமல், வெறுப்பில் இருக்கிறார் என்கிறார்கள்.


பல வருடங்கள் கழித்து, 2009 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நன்றி தெரிவித்தார் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால்.
அதன்பின் ஊடகங்களைச் சந்தித்த விஷால், “கமல் ஒரு விஷயத்தில் இறங்கினால், அதைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டுதான் இறங்குவார். ‘பிக் பாஸ்’ சர்ச்சை எல்லாம் அவருக்கு ஒரு விஷயமே கிடையாது. அவருக்குப் பிரச்னை என்றால், கலையுலகமே அவர் பின்னால் நிற்கும்” என்றார்.

இதைக் கேள்விப்பட்ட கமலுக்கு, கடுப்புதான் ஏற்பட்டதாம். கமல் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் ஏகப்பட்ட குடைச்சல்களைக் கொடுத்தது, ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழக அரசு. டி.டி.ஹெச். என்ற அருமையான திட்டத்தைக் கொண்டுவந்தபோது, தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்த்தனர். ‘அப்போதெல்லாம் என் பின்னால் நிற்காதவர்கள், இனிமேல் நின்று என்ன பயன்?’ என்று கேட்டாராம் கமல். விஷாலால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியுமா?

Post a Comment

Recent News

Recent Posts Widget