Ads (728x90)

விஜய்யுடன் ஏராளமான படங்கள் நடித்த நடிகை சங்கவி பவர் ஸ்டாருடன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சங்கவி. வயதானலே நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லாமல் போவது திரையுலகில் இயல்பான ஒன்றுதான். தமிழ், தெலுங்கு, கன்னடா என மூன்று மொழிகளிலும் நடித்து வந்த சங்கவி வயதானதால் சினிமாவில் தனது மார்க்கெட்டை இழந்தார். பின் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
 
நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது இவர் புதிதாக ‘நான் யார் தெரியுமா’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் பவர் ஸ்டார் சீனிவாசன், யோகிபாபு, கஞ்சாகருப்பு ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். சங்கவி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மூன்று காமெடி நடிகர்கள் இந்த படத்தில் நடிப்பதால் இது நகைச்சுவை திரைப்படம் என்று கருத முடிகிறது. இதில் சங்கவி பேயாக நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget