Ads (728x90)

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியி இந்திய அணி அபாரா வெற்றி பெற்றது. இது குறித்து இந்திய அணி கேப்டன் கோலி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார்.

கோலி கூறியதாவது, காலே நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை பெற்றது. இலங்கையால் இரு இன்னிங்சுகளிலும் 300 ரன்களை தாண்ட முடியவில்லை என்பது இந்திய அணியின் சிறப்பான வெற்றி என்று தெரிவித்தார்.
ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி எனக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ராகுல் வைரல் காய்ச்சலால் முதல் டெஸ்டில் ஆடவில்லை. 2 வது டெஸ்ட் போட்டிக்குள் அவர் தேறி விட்டால், அபினவ் முகுந்த்துக்கு 11 பேர் அணியில் இடம் கிடைப்பது கேள்விக்குறியாகும். 
அபினவ் சிறப்பாக பேட் செய்தார். சதம் விளாச தகுதியான ஆட்டத்தை அவர் வெளிபடுத்தியுள்ளார். எனவே, 11 பேர் அணியை தேர்ந்தெடுப்பது எனக்கு தலைவலியை தரப் போகிறது என சலிப்புடன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget