Ads (728x90)

இந்தியா 70-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியா-70 என்ற பெயரில் இந்திய திரைப்பட விழா நடக்கயிருக்கிறது. இதில் தரமான இந்திய படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஹிந்தி நடிகைகளான ஐஸ்வர்யாராய், வித்யாபாலன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவில், ஐஸ்வர்யா ராய், இந்திய தேசிய கொடியை அசைத்து திரைப்பட விழாவை தொடங்கி வைக்கிறாராம். அந்த வகையில், இந்திய தேசிய கொடியை ஆஸ்திரேலியாவில் பறக்க விடும் முதல் இந்திய பெண் பட்டியலில் இடம் பிடிக்கிறார் ஐஸ்வர்யா ராய். மேலும், இந்த விழாவில் கலந்துகொள்ளும் மற்றொரு பாலிவுட் நடிகையான வித்யாபாலன் இந்த திரைப்பட விழாவின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget