Ads (728x90)

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் படுதோல்வியால், சிம்புவைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள். ‘சினிமாவை  விட்டே விலகப் போகிறார்’, ‘நடிப்பதை விடப் போகிறார்’ என்றெல்லாம் கதைகள் உலாவிக் கொண்டிருந்தன. இன்னொரு  பக்கம், அவருடைய அடுத்த படம் என்ன என்பது குறித்தும் நிறைய கட்டுக்கதைகள் வந்துகொண்டே இருந்தன.
 
இந்நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்து சிம்புவே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும்  ராஜயோகம். எ சிலம்பரசன் ஃபிலிம், மியூஸிக் பை யுவன் சங்கர் ராஜா. ஏழு முறை விழுந்து, எட்டாவது முறையாக எழுந்து  நிற்பேன். தலைப்பு மற்றும் பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என சிம்பு தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், “இந்தப் படத்தில் பாடல்களோ, இடைவேளையோ கிடையாது. எனவே, உங்கள் பாப்கார்ன் மற்றும் ட்ரிங்ஸை படம் தொடங்குவதற்கு முன்பே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். செப்டம்பர் 2017 ரிலீஸ்” என்றும் அ

Post a Comment

Recent News

Recent Posts Widget