மருதானை பகுதியில் பாரிய வாகன நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே, குறித்த பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பாக கோட்டை பொலிஸார் ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படாத வகையிலும் குறித்த பேரணி அமைதல் வேண்டும் என நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Post a Comment