யுத்த குற்றம் என்ற பெயரில் அநாவசியமாக பாதுகாப்பு படைகளை கைதுசெய்யும் நடவடிக்கை ஒருபோதும் இடம்பெறவில்லை. முக்கியமான குற்றங்களுக்கான விசாரணைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குற்றவாளிகளையே கைது செய்வதாக பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு தரப்பினரின் கைதுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு மிகவும் பலவீனமாக உள்ளதாக அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பு செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.
Post a Comment