Ads (728x90)

விஐபி 2’வில் இணையாத தனுஷ் – அனிருத் கூட்டணி, ‘மாரி 2’ விலாவது அமையுமா? என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். பின்னணிப் பாடகரான விஜய் யேசுதாஸ் போலீஸாக நடித்த இந்தப் படத்தில், முக்கிய கேரக்டரில் ரோபோ சங்கர் நடித்திருந்தார். அனிருத், இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்தப் படம் ரிலீஸாகி, நேற்றோடு இரண்டு வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில், ‘மாரி’ இரண்டாம் பாகத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பாலாஜி மோகன்.

‘வேலையில்லா பட்டதாரி’ போல் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் அமையுமா அல்லது வேறொரு கதையை எடுக்கிறார்களா என்பது தெரியவில்லை. தனுஷுக்கும், அனிருத்துக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், ‘விஐபி 2’ படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். எனவே, ‘மாரி 2’ படத்துக்காவது அனிருத் இசையமைப்பாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget