Ads (728x90)

புதன் இந்த மாதம்  ஜூலை 20- வரையும், ஆகஸ்ட் 5- க்கு பிறகும்  நன்மை தருவார். கேதுவால் மாதம் முழுவதும் நன்மை கிடைக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் எந்தச் செயலையும் முடிக்க விடாமுயற்சி தேவைப்படும்.  ஆனால் முயற்சிக்கான பலன் கிடைக்கும்.

ராசிக்கு 9-ம் இடமான சிம்ம  ராசியில் இருக்கும் ராகுவால் தடங்கல், எதிரி தொல்லை ஏற்பட்டிருக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலைக்கு ஆளாகியிருப்பீர்கள். அவர் ஜூலை 27ல் 8-ம் இடமான கடகத்திற்கு செல்வதால் உறவினர் வகையில் பிரச்னை உருவாகலாம்.

ராசிக்கு 3-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, ஜூலை 27ல்  இடம் மாறி 2-ம் இடமான மகரத்திற்கு வந்த பின் அரசு வகையில் அனுகூல போக்கு இருக்காது. மாதத் தொடக்கத்தில் கேதுவால்  பக்தி உயர்வு மேம்படும். முயற்சி வெற்றி பெறும். கையில் பணப்புழக்கம் இருக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும்.   கடந்த மாதம் சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல்,சோர்வு, வயிறு தொடர்பான உபாதைகள் முதலியன இனி மறையும்.

குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் கிடைக்கும். மாதத் தொடக்கத்திலும், மாதஇறுதியிலும் ஆடம்பர எண்ணம் பூர்த்தியாகும். புத்தாடை,  அணிகலன்கள் வாங்கலாம்.  புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  திருமணம் போன்ற சுபவிஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.  வீடு, வாகன வகையில் நவீன மாற்றம் செய்ய வாய்ப்புண்டு.  ஆக.4, 5-ல்  பெண்களால் அனுகூலம் உண்டாகும். ஜூலை 30,31-ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஜூலை 21- முதல் ஆக. 5- வரை கணவன்- மனைவி இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உடல்நலனில் அக்கறை தேவை. செவ்வாயால் அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்படலாம். பயணத்தின் போது விழிப்புடன் இருக்கவும்.

தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். தொழிலாளர்களின் ஆதரவு சீராக இருக்கும். அடிக்கடி தொழில் விஷயமாக வெளியூர் செல்ல வாய்ப்புண்டு. ஏழரைச் சனி  காலம் என்பதால் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு- செலவு கணக்கை சரியாக வைக்கவும். ஆக.1, 2, 3, 6, 7, 8- ல் சந்திரனால் தடைகளை சந்திக்க நேரிடும்.  ஜூலை 19,20, ஆக. 15,16-ல்
எதிர்பாராத பணவரவு இருக்கும்.

பணியாளர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த பணிச்சுமை இனி இருக்காது. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். எதிர்பார்த்த பணி, இட மாற்றம் விரைவில்  கிடைக்கும். ஜூலை 25-க்குள் நிர்வாகத்தினரிடம் கோரிக்கைகளை கேட்டுப் பெறலாம்.  ஜூலை 28, 29-ல் அலுவலக ரீதியான முன்னேற்ற சம்பவம் நடக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். ஜூலை 21- முதல் ஆக. 5  வரை சிலரது  பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்துப் போகவும். கலைஞர்களுக்கு முயற்சியில் குறுக்கிட்ட தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஜூலை 25- க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம்.

அரசியல்வாதிகள் நற்பெயரோடு, நல்ல பதவியும் கிடைக்கப் பெறுவர். ஜூலை 25க்கு பிறகு பலனை எதிர்பாராமல் உழைக்க நேரிடும். ஜூலை 17,18,ஆகஸ்ட் 13,14-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். ஜூலை  20- வரையும், ஆக.5-க்கு பிறகும் புதன் சாதகமாக இருப்பதால் போட்டியில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும்.

விவசாயிகளுக்கு நெல், கோதுமை, சோளம், கேழ் வரகு போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் வருமானம் உயரும். ஜூலை 25- க்கு பிறகு பணிச்சுமை இருந்தாலும்  வருமானம் குறையாது. புதிய சொத்து ஜூலை27க்குள் வாங்கலாம்.

பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். உறவினர் மத்தியில் பெருமையுடன் திகழ்வீர்கள்.  ஜூலை 21, 22- ல் நற்பலனை எதிர்பார்க்கலாம். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். ஆகஸ்ட் 9, 10-ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனம்  வரப் பெறலாம்.

நல்ல நாள்: ஜூலை 19, 20, 21, 22, 28, 29, 30, 31, ஆக. 4,5,9,10,15,16
கவன நாள்: ஜூலை 23,24- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: சிவப்பு, பச்சை

பரிகாரம்
* வெள்ளியன்று அம்மனுக்கு அர்ச்சனை.
* சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்.
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget