நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களை விரட்டியடித்ததுடன் அவர்கள் வைத்திருந்த வலைகளையும், மீன்களையும் இலங்கை கடற்படையினர் கடலில் வீசினர்.
இதனால் மீனவர்கள் பாதியில் திரும்பினர். புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் காரைநகர் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர். மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment